தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மை தெய்வமாக விளங்குபவர் விநாயகப் பெருமான். இவரை முதலில் வணங்காமல் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கக் கூடாது என்கிறது இந்து சாஸ்திரம். எளியோருக்கு எளியோராக இருந்து அருளக் கூடியவர் கணபதி.
விநாயகர் சதுர்த்தி அன்று இவரை சிறப்பாக வணங்குவது வழக்கம். பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நாம் குறிப்பிட்டுள்ள விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் வாழ்வில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.
நாம் விநாயகரை வணங்கும் போது அருகம்புல்லால் அர்ச்சனை செய்த படி இந்த மந்திரங்களை சொல்லி வணங்கினால் விநாயகரின் அருள் மிக சிறப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் அவரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்