Shri Rudram là một câu thần chú hoặc bài tụng kinh Vệ Đà để tỏ lòng kính trọng đối với Rudra (một biểu tượng của thần Shiva) được lấy từ Taittiriya Samhita của Krishna Yajurveda. Nó bao gồm hai phần, Namakam và Chamakam. Chamakam được thêm vào theo truyền thống kinh thánh vào Shri Rudram. Shri Rudram còn được gọi là Śri Rudrapraśna, Śatarudrīya và Rudradhyaya.
ஸ்ரீருத்ரம் என்பது வடமொழியிலுள்ள கிருஷ்ண யஜுர்வேதத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்திற்கு (4-வது காண்டம், 5-வது அத்தியாயம்) பொது வழக்கிலுள்ள பெயர். யஜுர்வேதத்தின் 100 ('சாகைகள்' என்ற) கிளைகளிலும் இவ்வத்தியாயம் காணப்படுவதால் இது `` சதருத்ரீயம் 'என்றும் பெயர் பெற்றது. (`சத 'என்றால் நூறு) .அதனில் 37 ரிக்குகளும் 130 யஜுஸ்ஸுகளும் உள்ளன. செய்யுள் நடையிலுள்ள வேதவாக்கியத்திற்கு ரிக் (கு) என்றும் உரைநடையிலுள்ள வேதவாக்கியத்திற்கு யஜுஸ் என்றும் பெயர். ஸ்ரீருத்ரத்தில் 47 யஜுஸ்ஸுகள் தொடக்கத்திலும் முடிவிலும், மற்ற யஜுஸ்ஸுகள் தொடக்கத்தில் மட்டிலும், 'நமஹ' என்ற சொல்லை உடையவை. இதனாலேயே இவ்வத்தியாயத்திற்கு 'ருத்ர-நமகம்' அல்லது சுருக்கமாக 'நமகம்' என்றும் ஒரு பெயர் உண்டு. இது 'ருத்ரன்' என்ற சிவனை 300 பெயர்களாலும் இன்னும் பல மந்திரங்களாலும் போற்றி போற்றி என்று போற்றுவது. திராவிட நாட்டு அந்தணர்கள் கூட்டமாகச்சேர்ந்து சிவலிங்கத்திற்கு நீராடல்செய்யும்போது இந்த ருத்ரத்தை அதன் ஸ்வரங்களுடன் உரக்க உச்சரிப்பது செவிக்கும் உள்ளத்திற்கும் ஓர் ஆன்மீகவிருந்தென்று சொல்வோர் பலர். d
Shri Rudram is a Vedic mantra or chant in homage to Rudra (an epithet of Shiva) taken from the Krishna Yajurveda's Taittiriya Samhita. It comprises two parts, the Namakam and Chamakam. Chamakam is added by scriptural tradition to the Shri Rudram. Shri Rudram is also known as Śri Rudrapraśna, Śatarudrīya and Rudradhyaya.