கண்ணபுர நாயகி மாரியம்மனைத் தென்னிந்திய மக்கள் மிகவும் முக்கியமான கடவுளாக வணங்கி வருகின்றனர். அம்மனைக் குறித்துப் பல பேர் போற்றி எழுதிப் பாடியுள்ளார். ஆனால் இந்தப் பாடல் பலரைக் கவர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இப்பாடலைப் பிரபல திரைப்பட பின்னணி பாடகி திரு எல் ஆர் ஈஸ்வரி தன்னுடைய இனிமையான குரலில் பாடியது தான். 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் பாடல் அனைத்து அம்மன் கோவில்களில் ஒலிக்கிறதைக் கேட்க முடியும். குறிப்பாக ஆடி மாதத்தில் இந்தப் பாடலைப் பக்தர்கள் பாடி வழிபடுவர். இப்பாடலுக்கு அருமையான இசை அமைத்துள்ளார்கள் பக்தர்கள் அனைவரையுமே கரகம் ஆட வைத்துவிடும்.
கண்ணபுர நாயகியே மாரியம்மனே நாங்கள் எங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற இங்கு கரகம் ஏந்தி ஆட வந்தோம் நீங்க அதைப் பார்க்க வேண்டும் அம்மா
நீ கண் திறந்து பார்த்தாலே எங்களுக்குப் போதும் அம்மா எங்கள் கவலைகள் எல்லாம் மனசை விட்டு வெளியேறிப் போகும் அம்மா.
எல்லோரைப் பார்க்கிலும் நீ உத்தமியே உந்தன் அருளைப் பெற நாங்கள் தேடி நாடி இங்கே உன்னிடம் வந்தோம்.
அம்மனே உனக்குப் பிடித்த இசை கருவிகள் ஆகிய பம்பையும் உடுக்கையும் நாங்கள் எடுத்து வந்து உன் மகிமையைப் பாட இங்கே வந்தோம்.
அம்மா பச்சை இலையில் தேர் எடுத்து வர வேண்டும் உன் பக்தராகிய எங்களுக்கு நாங்கள் வேண்டும் வரத்தை எல்லாம் நீ தர வேண்டும்.
கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் அம்மா.
வேம்ப மரத்தின் இலைகளைக் கொண்டு எல்லா நோய்களையும் தீர்த்திடும் வல்லமை கொண்டவளே
எங்கள் மன வேதனைகளை எல்லாம் திருநீரைக் கொண்டு மாற்றிடுவாய்
எங்களைக் காப்பாற்ற சூலத்தை உந்தன் கைகளில் ஏந்திடுவாய்
தினமும் நாங்கள் ஏற்றும் கற்பூர ஜோதியில் நீ வந்து வாழ்ந்திடுவாய்
கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் அம்மா.
மலை ஏறும் தாயே உனக்கு நாங்கள் கும்பமிட்டோம்
அரிசி மாவிளக்கை ஏத்தி வைத்து உனக்குப் பொங்கலிட்டோம்
இந்த உலகை ஆள பிறந்தவளே எனக்கு அருளைத் தருவாய்யாக
எங்கள் வீடு எல்லாம் பால் பொங்க வரம் தருவாய்யாக
கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் அம்மா.
நீ கண் திறந்து பார்த்தாலே எங்களுக்குப் போதும் அம்மா எங்கள் கவலைகளை எல்லாம் மனசை விட்டு வெளியே போகும் அம்மா.
கண்ணபுர நாயகியே மாரியம்மா நாங்கள் கரகம் ஏந்தி ஆட வந்தோம் பாரும் அம்மா.
Kannapura Mariyamman