மாணிக்கவாசகர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவரால் எழுதப்பட்ட திருவாசகம் தமிழ் சைவ நூல் இதில் இருந்து ஒரு பகுதியாகப் பாடல் அமைந்துள்ளது. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று தமிழறிஞர்களால் போற்றிப்படுகிறது. இவ்வளவு சிறப்புப் பெற்ற இந்நூலின் முதல் பகுதியான சிவபுராணம் இடம் பெற்றுள்ளது.
மொத்தம் 95 அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலில் சைவப் பக்தர்களின் முதன்மை கடவுளாக வழிபடுகின்ற சிவபெருமானின் தோற்றத்தையும்
பண்புகளையும்
இயல்புகளையும் செயல்களையும்
விவரிக்கிறது.
அனைத்து உயிர்களும் இறைவன் அடி சேர்வதற்கான வழிமுறைகளையும் சைவ சித்தாந்தச் சாத்திரங்கள் தத்துவ நோக்கில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள இப்பாடலின் பல பகுதிகள் இப்போதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் எளிதாகக் கற்கவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது.
நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க, என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காதவரே வாழ்க, கோகழி என்கின்ற சிவ தலங்களை ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க, எல்லா ஆகமம் ஆகி நின்று பக்கத்தில் இருப்பவன் இனிமை செய்வான் தாள் வாழ்க, ஒருவன் ஆனால் அநேகன் இறைவன் அடி வாழ்க.
Namashivaya