இந்த உலகத்தைக் காப்ப வரும், கழுத்தில் அழகான மலர் மாலையை அணிந்திருப்பவரும், பிரகாசமான வட்ட நிலவை தன் தலையில் கொண்ட வரும், அசுரர்களை அழித்த இறைவன், நீல வானத்தின் வண்ணத்தைக் கொண்டவனே, ஒன்றும் தடுக்க முடியாது சக்தி கொண்டவன், பெண் தெய்வமாகிய லஷ்மிக்கு உதவி புரிபவரை வணங்கிறோம், நான் உன்னையே வணங்குகிறேன்.
கடலில் வாழுபவரே, மலரைப் போன்று சிரிப்பு உடையவரே, உலகத்தில் அனைத்து இடங்களிலும் வாழ்கின்றவரே, நூற்றுக்கணக்கான சூரியங்களின் ஒளியைப் போன்று பிரகாசிப்பவரே, மச்சத்தையும் தெய்வீகமான சக்கரத்தையும் ஆபரணமாய் அணிந்திருப்பவரே, மஞ்சள் நிற ஆடை உடுத்துபவரே, இன்முகத்துடன் சிரிப்பால் அலங்கரிக்கப்பட்டவரே உன்னையே நான் வணங்குகிறேன்.
லஷ்மியின் கழுத்தில் மாலையாக இருப்பவரே, வேதங்களின் மூல காரணரே, தண்ணீரில் வாழ்பவரே, பூமியின் எடையைக் குறைப்பவரே, நித்திய மகிழ்ச்சியையும் மனதைக் கவரும் பல்வேறு வகையில் தோற்றம் பெற்றவரே, உன்னையே நான் வணங்குகிறேன்.
பிறப்பு இல்லாதவர், வயது அடையாதவர், முழு நித்திய மகிழ்ச்சியையும் சமாதானத்தை விரும்புபவரே, உலகத்தின் தோற்றத்திற்கு காரணரே, தேவ சேனைகளைக் காப்பவரே, மூன்று உலகங்களையும் இணைக்கும் பாலமாக விளங்குகிறவரே, உன்னையே நான் வணங்குகிறேன்.
Sri Hari Stotram