எங்கள் முத்துமாரி அம்மனுக்குத் திரு விழா நாளாம். அன்று
அவள் முகத்தின் அழகைக் காண வரும் பக்தர்களுக்குக் கிடைத்தது அந்த ஒரு நாளாம். அது கிடைப்பதற்கு அரிய நாளாம்.
சித்திரை மாதத்தில் பூக்கும் பூக்களைக் கொண்டு மாலை செய்து அதைத் தோரணாமாம் அணிந்து கொண்டு காட்சி அளிப்பாள். அவள் சிங்காரத் தேரில் வரும் போது அது பெரிய ஊர் வலமாகத் தொன்றும்.
பக்தர்கள் அம்மனுக்குப் பாலையும் பன்னீரையும் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
அவளுடைய பொன்மேனியை மலர்களினால் அலங்காரம் செய்து மங்கள குங்குமத்தில் திலகமிட்டு
அவள் மஞ்சள் நிற ஆடைக்கட்டி வந்திடுவளாம்.
அவள் திரிசூலம் கையில் ஏந்திக் கொண்டு வரும் திருசூலியாம்.
அவள் திக்கெட்டும் காத்து வரும் காளியம்மன்.
அம்மன் கற்பூரச் சூடரியில் சிரித்திடுவாளாம்.
அவள் தீராத நோய் எல்லாம் தீர்த்திடுவாளாம்.
நாங்கள் சக்க்கரையில் பொங்கலிட அவள் மகிழ்ந்திடுவாளாம்.
பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வணங்கிடவே வேண்டும் வரம் தருவாளாம்.
முழங்கி வரும் முரசங்களைக் கேட்டிடுவாளாம்.
நம் எல்லோருக்கும் முன் நின்று நல்ல அருளைத் தந்திடுவாளாம்
அம்மா நாகத்திலே நீ அமர்ந்து காட்சித் தருவாய்.
நாயகியே உன்னைத் தொழுதால் எங்களுக்கு நல்ல வாழ்வு கொடுப்பாய்.
அம்மா எங்களுக்கு அன்னையாக நீ இருந்து ஆசி வழங்குவாய்.
அருள் என்னும் பாலைத் தந்து எங்களைப் பாடவும் வைப்பாய்.
Muthu Mariamman