தமிழ் மரபில் தோன்றிய தற்காப்புக் கலைகளில் ஒன்று வர்மக்கலை. உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளில் தாக்குவது அல்லது சிகிச்சை அளிப்பதே வர்மக் கலையாகும்.
உயிர் தங்கியுள்ள இடங்களைத்தான், வர்மம் என்பார்கள். அந்த இடங்களை குறிவைத்து தாக்குவதற்கு, வர்மக்கலை என்று பெயர். இது அடிமுறை தற்காப்பு கலையின் ஒரு அங்கம். மொத்தமுள்ள 126 வர்மங்களில் படு வர்மம், தொடு வர்மம், தட்டு வர்மம், அடங்கல் வர்மம், நோக்கு வர்மம் போன்றவை மிக முக்கியமானவை