வாழை ஒரு பழமையான, மிக பிரபலமான பழமாகும். வாழை சொர்க்கத்தின் ஆப்பிள் என்று் அழைக்கப்படுகிறது. இதனுடைய பிறப்பிடம் இந்திய மலேயன் பகுதிகளில் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. இது பரவலாக பழமாகவே உண்ணப்படுகிறது. தண்டின் நடுப்பகுதி காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், தண்டுப் பகுதி பேப்பர் மற்றும் கார்டுபோர்டு அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதில் திருச்சி, தூத்துக்குடி, கோயமுத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இது உயரமாக வளரும் ஒரு செடி வகையாகும். நிலத்தில் அடியில் உள்ள தண்டிலிருந்து உருவாகும் பொய்த்தண்டை சுற்றி இலையுறைகள் சூழ்ந்திருக்கும்.
TNAU வாழை மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது, நீர் பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, பண்ணை இயந்திரங்கள், அறுவடை & அறுவடைப் பின்சார் தொழில்நுட்பங்கள், வணிக மேலாண்மை, நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அடக்கியுள்ளது.
Updated contents in Decision Support System(DSS)